இயற்பியல்

செலுத்திய விசையும்
செவிக்கி கேட்கும்
இதமான ஓசையும்
அன்றாட வாழ்வின்
கற்பனையான பக்கங்களும்
ஓடும் நேரமும் நின்று 
ரசிக்கும் வானவில்லும்
இரவும் பகலும்

இயக்கமே
இணைந்து இருக்கும்
மின்சாரம்
திரவம் திண்மாகவும்
திண்மம் வாயுவாகவும்

சுழலும் 
பூமியின் வெளியே
சுடராய் சூரியனும்

இன்னும் எத்தனை
கோடி அணுக்கள்
இன்னும் மண் மீது
பூக்கின்றன

பிறப்பு
முதல் இறப்பு
வரை வாழ்வில்
இயக்கம் மயக்கம்
தயக்கம் 
கோணம் வேகம்
மேகம் தாகம்

எல்லாவற்றிலும்
"இயற்பியல்"
தான் ஒருவழிப்பாதை


Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்