Posts

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

Image
மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நடைபெற்றன இதில் பல்வேறு அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் R. சந்திரன் M.A.,B.Ed., விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்

வானவில் மன்றம் செயல்வழி கற்றல் நிகழ்ச்சி

Image
அரசு உயர்நிலைப்பள்ளி         சுக்கிரவார்பட்டி     இன்று எம் பள்ளியில் வானவில் மன்றம் சார்பாக அறிவியல் பாடம் செயல்வழி கற்றலாக நடந்தது       இதில் பெரிஸ்கோப், தொடரிணைப்பு,பக்க இணைப்பு, அமிலம் மற்றும் காரம் சார்ந்த பொருளை கண்டறிவது போன்ற செயல்பாடுகள் நடைபெற்றது

மரக்கன்று நடுதல்

Image
அரசு உயர்நிலைப்பள்ளி, சுக்கிரவார்பட்டி. மரக்கன்றுகளை நாட்டி விட்டு வந்தோம் பல வருடம் கழித்து வளர்ந்து பல நன்மைகளை செய்ய போகிறது.

கற்பித்தல் செயல்பாடுகள்

கற்பித்தல் செயல்பாடுகள் என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளைச் செயல்படுத்துவதற்காக பயன்படுத்தும் வழிகளாகும்.  கற்பித்தல் முறைகள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உதவும் பரந்த நுட்பங்கள்.   கற்பித்தல் செயல்பாடுகளின் வகைகள்: செயல்வழி கற்றல் (Activity Based Learning அல்லது ABL) குழந்தைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக கல்வி கற்பிக்கப்படும் முறை.   கூட்டுக் கற்றல் (Collaborative Learning) குழுக் கற்றல் அல்லது கூட்டுறவுக் கற்றல் என்றும் அறியப்படும், ஒரு பொதுவான கற்றல் இலக்கை அடைய மாணவர்கள் சிறு குழுக்களாக இணைந்து செயல்படும் முறை.   ஆசிரியர் மைய கற்றல் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை மெளனமாக கேட்டு கற்றலில் ஈடுபடுவர்.   கற்பித்தல் முறைகள், கற்கும் மாணவர்களின் இயல்பு மற்றும் கற்பிக்கப்படவேண்டிய பாடப்பொருள் ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.  

வாழ்க்கை~பட்டாம்பூச்சி

கூடிவரும் நேரத்தில் கூட்டைவிட்டு பறந்த பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுவாராஸ்யம் நிறைந்த ஒன்று  விடாது போராடும் குணம் தெளிவாக பகுத்த பாதை சோர்வில்லா துயரமில்லா மனம் எல்லையில்லா பயணத்தின் கூறுகள் சொல்வதில் இல்லை வாழ்வு அங்கங்கே நீங்கநினைவுகளை விட்டுவிட்டு செல்வதுதான் இயல்பு வாழ்க்கையின் மொத்த கோட்பாட்டை ஒரே விநாடிகளில் சொல்லிவிட்டு பறந்து சென்றது எனக்கு மேலே திரிந்த பட்டாம்பூச்சி

வாழ்க்கை~வரையறை

நான்  உடையும்நீர்க்குமிழியில் உயிரை பெற்றேன் உலகை ஜீவிக்க சற்று கொஞ்சமாக உணர்வை கேட்டேன் சில நேரங்களில் தர்க்கங்களுக்கும் வியூகங்களுக்கும் விளக்கம் அளிக்க தருணமில்லை கோடி விளக்குகள் விண்னை நகலெடுக்கலாம் காலவெளி பயணிக்க அனுமதித்தாலும் பணிநியமனம் யாரும் வழங்க முன்வரவில்லை ஒரு ஊடகத்தின் நுழைந்த பட்டாம் பூச்சியின் இறகு விரிக்கும்முன் அதன் சிரிப்பு பறந்து போனது எண்ணம் குழப்பங்களுக்கும் குளருபடிகளுக்கும் சிக்கி  ஊமை ஆகிறது தத்துவம் வாழ்க்கையில் பின்னி பிணைந்து கொள்ளும் முடிச்சுகளை அவிழ்க்க சில அறிகுறிகளையும் தந்து கொண்டு தான் இருக்கிறது புரியவில்லை என்றால் உனை கேள்வி கேள் மனப்பிதற்றல் என்றால் பிழையும் திருத்து..

காதல் கடிதம்

ஓவியனை வரைய சொல்லி கேட்டேன் ஓவியமாய் வாழும் ஒருத்தியை எவ்வாறு வரைவது அவளின் விழியை ரசிக்கும் அவனின் விழிகள் வந்துபோகும் கனவுபோல் வந்துநிற்கிறது மெல்லப்பேசும் அவளின் தன்மை கேட்க தீராமல் தீர காதலிக்க கடிதம் எழுதினான்  கார்மேகம் அவளின் காதலி தாரிகாவிற்கு