வாழ்க்கை~பட்டாம்பூச்சி
கூடிவரும்
நேரத்தில் கூட்டைவிட்டு
பறந்த பட்டாம்பூச்சியின்
வாழ்க்கை
சுவாராஸ்யம் நிறைந்த
ஒன்று
விடாது
போராடும் குணம்
தெளிவாக
பகுத்த பாதை
சோர்வில்லா
துயரமில்லா மனம்
எல்லையில்லா
பயணத்தின் கூறுகள்
சொல்வதில்
இல்லை வாழ்வு
அங்கங்கே நீங்கநினைவுகளை
விட்டுவிட்டு செல்வதுதான்
இயல்பு
வாழ்க்கையின்
மொத்த கோட்பாட்டை
ஒரே விநாடிகளில்
சொல்லிவிட்டு பறந்து
சென்றது
எனக்கு மேலே
திரிந்த பட்டாம்பூச்சி
Comments
Post a Comment