வாழ்க்கை~வரையறை

நான் 
உடையும்நீர்க்குமிழியில்
உயிரை
பெற்றேன்
உலகை ஜீவிக்க
சற்று கொஞ்சமாக
உணர்வை
கேட்டேன்
சில நேரங்களில்
தர்க்கங்களுக்கும் வியூகங்களுக்கும்
விளக்கம் அளிக்க
தருணமில்லை
கோடி
விளக்குகள் விண்னை
நகலெடுக்கலாம்
காலவெளி
பயணிக்க அனுமதித்தாலும்
பணிநியமனம்
யாரும் வழங்க
முன்வரவில்லை
ஒரு ஊடகத்தின்
நுழைந்த பட்டாம்பூச்சியின்
இறகு விரிக்கும்முன்
அதன் சிரிப்பு
பறந்து போனது
எண்ணம்
குழப்பங்களுக்கும் குளருபடிகளுக்கும் சிக்கி 
ஊமை
ஆகிறது
தத்துவம்
வாழ்க்கையில்
பின்னி பிணைந்து கொள்ளும்
முடிச்சுகளை அவிழ்க்க
சில
அறிகுறிகளையும்
தந்து கொண்டு தான்
இருக்கிறது
புரியவில்லை
என்றால் உனை
கேள்வி கேள்
மனப்பிதற்றல் என்றால்
பிழையும் திருத்து..





Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்