விழி பேசும் மொழி
இருவரின்
உயிரில் ஒரு
உரை
விழி தெறித்திடும்
பார்வையில் மிரள
செய்து
பாவை பக்குவமாய்
மொழி பேசுவாள்
விழி மையில்
உறைந்து
உயிரில்
கரைந்து போகும்
உணர்வை
தருபவள்
மழையும் வெயிலும்
சேருமிடம் இதம்
இதயம் குளிர
இதம் சேர்த்து
அதில் கொஞ்சம்
இன்பத்தேனை கலந்து
அவளோ அதை
பரிமாற நான்
அதை எடுத்து கொள்ள
இரு கரைகளை
சேர துடிக்கும்
மதகு போல உனை
கரை சேர்க்க
பயணிப்பேன்...
Comments
Post a Comment