புதையல்
பகலின்
பாதியை கடன்வாங்கி
வந்த நீ
நான் உண்டபின்
எனையே
அழைத்தாய்
தீராத விடை
தரும் வீரியமிக்க
பொருள் நீ
பேரின்பம்
வரும் உனை
நினைக்கும்போது
காரிய பெரும்
பரம்பொருளே
திக்திக் என்று
திணறவைக்கும்
திணறல் நீ
பல உறவை
உறைய வைக்கும்
இணைய பாலமே
நீ வேறு யாரும்
இல்லை
என் வாழ்வின்
துணையாய் இறுதிவரை
வரும்
"இனிய இரவே
இரவே"
Comments
Post a Comment