நொடி பொழுதில் ஒரு காதல்
கோடி தரிசனம்
கண்டாலும்
பேருந்தின் ஓரத்தில்
கூந்தலை
ஒதுக்கி
ஒருத்திபார்த்தால்
உயிரின் மொத்த
உருவத்தையும்
ஒரு புள்ளியில்
சிக்க வைத்து
விரல் மேவியே காதலை
சொல்வாள்
சிலாகித்து சிலிர்த்த
உயிரை அவள்
மெல்லிய கைகளில்
வசப்படுத்தி
நுனிபூக்கும் தெரியும்
இவளின் நுனிவிரலை
படபடவென்று
ஊரும் வந்தது
அவள் மீது
என்னால் இந்த கைகள்
கோர்த்து ஏற்பட்ட ஈரம்
வாழ்நாள் முழுவதும்
அவளை என்னிடம்
ஆட்படுத்தும்
Comments
Post a Comment