சிறுகதை என்றும் சொல்லலாம்
ஒரு நீண்ட இரவில் விண்மீன் விழிக்கும்
நேரத்தில் அடர்த்தியான நேரத்தில்
விடுதியின் விளிம்பில் நின்று கொண்டு
இருந்தான்...அவன் விடுதியில் தங்கியிருக்கும் அழகன் ஆவான்
அங்கே இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை யாவரும் தூங்கிய
நேரத்தில் ஒருவன் மட்டும் கண்கள் விரிய
விழித்து கொண்டு அந்தசத்தம் கேட்டு
நிசப்தநிலையை உணர்ந்தான்
கால்கள் இரண்டும் தரையில் ஊன்றி
எழுந்து பார்த்தான் அவ்விடம் யாரும் இல்லை சற்று நேரம் கழித்து மீண்டும் மீண்டும் அதே சத்தம் ஓங்கி ஓங்கி
ஒலிக்க விழி பிதுங்கி என்ன செய்வது
என்று தெரியாமல் இடறித்தவித்தான்
அருகில் உள்ள நண்பர்களை அழைத்தால்
எள்ளல்களுக்கு ஆளாகி விடுவோமோ என்று மற்றொரு அச்சம்
தனிமை அவனைச் சூழ்ந்து அவனை
இறுக்கத்தின் இறுக்கமாய் சுற்றி பின்னி கொண்டு இருந்தது
சத்தமிட்ட இடத்தை நோக்கி அழகன்
பேசினான்
"இந்த மாரி வேல என்ட வச்சுக்காதா
எனக்கும் பண்ண தெரியும்லே"
பிறகும் தீராத அந்த அலறி
அலறி அந்த குரல் ஒலிக்க
இவன் பிதற்றி பிதற்றி
தவித்தான்
அழகனுக்கு மட்டும் தான் இந்த கொடுமை என்றால் அவன் வரிசையில் இருக்கும்
அறையில் யாழனுக்கும் இதேபோல்
நிகழ்வுதான்
"நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டீல்
வச்சிக்கலாம் இங்க உள்ளவனுங்க
எல்லாம் சாப்பாடு சரியில்லைனு இருக்கனுங்க கொஞ்சம் நல்ல சாப்பாடும் எனக்கு மட்டும் அசைவ
சாப்பாடு வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை வைத்தான் "
அந்த சத்தம் கேட்ட இடத்தில் யாழன்.
இப்படி ஒரு புறம் அவனும் மறுபுறம்
இவனும்,மிரட்டியும் நிர்பந்தப்படுத்தி
இருந்தனார்
அழகனின் கைகள் வியர்த்து விறுவிறுத்துப்போய் அறையின் நாரங்கியை திறக்க முடிவெடுத்தான்
மற்றொரு புறம் அவன் கைகளில்
வெளக்கமார் ஒன்றை கையில்
வைத்து கொண்டு நாரங்கியை
திறக்க முற்படும் நேரம் கண்கண்ணாடி
கீழே விழுந்தது இருந்தும் அதை எடுத்து மாட்டிக்கொண்டு
"இன்னிக்கு ஒரு பிடி" என்று யாழன்
உரைக்க
யாரது யாரை இருந்தாலும் பேசிக்
கொண்டு சுமுகமாய் போய் விடுவோம்
என்று அழகன் உரைக்க
கதவை திறந்து பார்த்தால் அங்குதான்
ஒரு விசித்திரமான ஆச்சரியம்
அந்த அலறின குரலும் வேறு யாரும் இல்லை "இரு நாய்களின் குரல் தான்"
உள்ளிருந்து கேட்ட போது வேறு
குரல் கேட்டதை நினைத்த நிலையில்
இருந்து இருவரும் பேசிக்கொண்டு அவரவர் அறைக்கு சென்றனர்
மீண்டும் அதே அலறல் சத்தம் கேட்டு
தன் வைத்திருந்த போர்வை எடுத்து மூடிக்கொண்டு மூச்சை விட ஆரம்பித்தான்
யாழனுக்கு மட்டும் ஏதோ ஒரு
இளமையின் இனிமை குரல் தவித்தது போல் இருந்தது
"இன்னும் அது தெரியவில்லை
ஒரு பிரமிப்பு தான் இருவருக்கும்"
Comments
Post a Comment