இமையத்தின் "பெத்தவன்"
இமையம் படைத்த படைப்புகளில் உள்நுழைய ஒரு வாய்ப்பை விஜய் அண்ணா ஏற்படுத்தி "பெத்தவன்" எனும்
கதை எனக்கு வாசிக்க நேரம் இருந்தது
அதுவோ இரவு நேரம் சரி இன்றைக்கு
வாசித்து விட்டு தூங்குவோம் என நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன்
ஆரம்பம் ஊர்களில் ஒரு சாதி உடைய மக்களின் ஊர் ஒன்று கதையில் வருகிறது. இதில் ஒரு பெண்ணை அளவில்லாமல் வாய்க்கு வந்த படியெல்லாம் வஞ்சிக்கிறார்கள்....
ஏன் இவரை இவ்வாறு கூற வேண்டும்
என்ன நடந்தது என்ற விறுவிறுப்பை கூட்டுகிறது
தவமாய் தவமிருந்து பெற்ற மகளை பழனி நாளை அவள் பிணம் வேகும் இல்லையெனில் என் பிணம் வேகும் என்று ஊருக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார்
ஏன் இவ்வளவு ஆத்திரம் அந்த பெண்ணின் மீது என்ற எதிர்பார்ப்பு
இன்னும் கதையில் விறுவிறுப்பு கூடுகிறது
அவள் பெயர் பாக்கியம் அவள் கல்லூரி படிக்கும் போது ஒரு மாணவன் உடன் காதல் வயப்பட்டு இருந்தார் என்பதும் அவன் கீழ் சாதியினத்தை சேர்ந்தவன் என்பதால் எதிர்ப்புகள் வலுவாய்
இருந்தது பாக்கியத்தை அடித்து கொலை மிரட்டல் விடுத்து, மீண்டும் மீண்டும் அவள் அவனோடு போய் விட வேணும் என்று நினைப்பதால் அவளை கொன்றுவிட திட்டமிடுகிறது ஊர்
பழனி மகளை கொல்லாமல் அவளை அந்த காதலித்த பையனோடு யாருக்கும் தெரியாமல் முந்திரிகாட்டின் வழியே விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கிறார்
மறுநாள் காலை ஒரு சம்பவம் "பெத்தவன்" கதை அந்த சம்பவத்தில் நிற்கிறது..
Comments
Post a Comment