தீராத தனிமை
வானமெல்லாம்
வண்ண கோல
மின்னல் தெறிக்க
விடாமல்
வெறுமையின்
பொறுமையும் என்னை
சோதிக்க ஆரம்பித்தது
ஆகாசம் அகன்றாலும்
பூலோகம் புகைந்தாலும்
கண்கள் விரிய
பார்த்த அனுபவம்
கிடைத்தாலும்
பார்க்கும் பார்வைகளில்
யதார்த்தமெல்லாம்
சிதறிப்போக
வாழ்க்கையின் கதாபாத்திரம்
சித்தரிக்கும் பொருளாக
மாறி வரும்
நேரம்
அகன்ற இருளை
கொண்டிருக்கும் கிணற்றின்
மேல் தூங்கும்
நிலா போல
வீணை மீது
விளையாடி கொண்டிருக்கும்
இசைபோல
என்னவென்று
இதை நான் சொல்வது
தீராத
தனிமையை...!!!
Comments
Post a Comment