எதிர்பாராதீர்கள்

வீண்மீன்
தூவும் மழையில்
விண்ணப்பம் ஒன்று
எழுதினேன்

அது வெறும்
கனவாய் அழிந்துவிட்டது

பார்க்கும்
பார்வையில் வசப்பட்ட நான்
ஏன் வசப்பட்டேன்
என்று தெரியவில்லை

இலையின் மேல்
தெறித்து ஓடும்
மழைநீரின்
துளியாய் நினைத்து
மகிழ்வை
கொண்டாடினேன்

வினாக்கள்
தேடினேன் தேடினேன்
விடை மட்டும்
கிடைக்கவில்லை

கிடைத்த விடையும்
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை

வானம் தான்
தரை வர ஆசை
படலாமா

என் ஆசைகளும்
அவ்வாறுதான்


Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்