முடிவிலி

இளங்குருதியின் வாடை விழிபிதுங்கும்
அளவிற்கு இருந்தது மூடிய ஜன்னலின் விளிம்பில்  இருந்த ஒரு துணியின் 
மேல் வெளியில் இருந்து பார்த்த அனைவரும் பதறி பார்த்துவிட்டு அதை
அங்கேயே விட்டுட்டு வேறு ஒரு சிந்தனைக்கு சென்றுவிட்டார்கள் ஆனால் அந்த கவுச்ச நாற்றம் அந்த சில நொடிகளில் மறந்து விட்டது

அங்கு உயிர் ஊசலாடி கொண்டு இருந்ததா என தெரியாமலே அனைவரும் கலைந்து சென்றன

வெகுநாட்கள் சென்றுவிட்ட பிறகுதான் தெரிய வந்தது ஒரு விடை சில நாட்களுக்கு முன் அந்த அறையில் தங்கி இருந்த யாரோ ஒருவருக்கு தான் இந்த ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது

கரடுமுரடான ஒரு பாதையில் ஒரு ஊரு அமைந்திருக்கிறது அங்கு வசிப்பவன்தான் ரகு அவனின் படிப்பில் சிறந்தவன் ஆனால் அவனுக்கு வசதி இல்லை 

ஊரில் இருக்கும் பூக்களையும்
புல்களையும் ரசிக்க தெரிந்தவனுக்கு
அதை பற்றி படிக்கவும் வானில் ஊர்தி செல்வதையும் அவன் ரசிப்பதை எல்லாம் படிக்க வேண்டும் என்பது அவனுக்கு மிகுந்த ஆர்வம்
ஆனால் படிக்க முடியாத பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறான் 

ஒருநாள் இந்த வெறுமையின் 
தனிமையில் இருந்த அவனின் பயணத்தின் சிறகு விரிந்ததா
இல்லையா 

அந்த இளங்குருதி வாடைக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு 

ஊரின் பின்னணி என்னவென்று
ரகுவின் பார்வைக்கு தெரிய வந்தது
ரகுவின் நண்பர்களின் பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தின.

இறுதி என்ன என்று குறிப்பிடாமல் இருந்தது அந்த நாள் குறிப்பின்
முடிவு

ஆம் இரத்த வாடையும் ரகுவும்
நாட்குறிப்பின் கதைமாந்தர்கள்

Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்