ஒருவேளை காதலின் அறிகுறியோ
யாரென்று தெரியாமல்
பழகினேன்
பேசிக்கொண்டே நேரங்களை
தொலைத்தேன்
இனியவளின் இளமுகத்தில்
விழுந்தேன்
புனிதகாதலை விழியில்
தொழுதேன்
அலைபேசியில் பேச
அலைந்தேன்
நெருக்கமாய் இருக்க
மறுத்தேன்
உயிரின் உயிரால்
எழுதினேன்
இடைவெளி இல்லாமல்
பழகினேன்
மீளாதுயரில் இருந்து
எழுந்தேன்
தினம்தோறும் காதலால்
நனைந்தேன்
கண்ணாடியில் நான்பார்த்து
சிரித்தேன்
இன்பமேனும் சிறகைவிரித்து
சிலாகித்தேன்
Comments
Post a Comment