நினைவு~என்னவள்
வான் திறந்தபிறகு
வந்த ஒளியின்
சிறுசிதறிய ஒளித்துண்டுதான்
"நான்"
கரையில் நினைவை சேர்க்கும்
அவளின் பாதச்சுவடு
எனை பின்தொடரச் செய்தது
மழையில் சிதறிய
துளியின் நினைவு
கொஞ்சம் நேரம்
உன் அழகைப்
கரையோடு தொடர
ஆரம்பித்தேன்
உன் தலைப்பின்னலில்
பின்னிக்கொண்டது
உன் ஈரக்கூந்தல்
மட்டுமல்ல
சில உரையாடல்களின்
முன்னுரையும்
அவைதான்
ஓயாமல்
அலையும் அலைகளின்
தன்மை கொண்டது அவளின்
பெண்மை
நிலவாய்
இனியவள் முகம்
இரவாய்
சூழும் என்முகம்
நீலவொளி
வாங்கிய கடல்
காற்றில் பறந்து
செவியோரம்
குளிரச்செய்தது
என்னவளை
நினைத்தாலே..
வார்த்தைகள்
நின்று எனை
எங்கோ கொண்டு சென்று
விடுகிறது
Comments
Post a Comment