மாயம்~காலம் வெளி
நினைவுகள் சிதறித்
தெறிக்கும்
காலமேடைகளில்
கண்ணுக்குள்ளேயே ஓடி
சிந்தி கொண்டிருக்கும்
உணர்வுகளின்
உண்மைகளை சித்தரிக்க
தொடங்கினேன்
நான்
தேநீர்
அருந்திய தருணம்
நீங்கள் இங்கே
வந்து என்ன
செய்கிறீங்க
வானம் விரியும்
யோசனையும்
வாழ்க்கையின் வசந்தப்புள்ளி
இட்டு வைக்காதா
என ஏங்கும்
மனம் என்னை
எழுத முடிக்கியது
உங்களின்
இப்போதைய
நிலைமை யாருடையது
யாரால்
வரையறுக்கப்பட்டவை
வாழ்வின்
கோட்பாடுகள்
காலவெளிகளுக்கு
இடையே
பயணப்பட்டுக்கொண்டிருக்கும்
நேரம் ஊறிக்
கொண்டேதான் இருக்கிறது
அதற்கான
வரையறையும் வகுக்கப்பட்டுதான்
இருக்கிறது
எது எப்படியோ
உயிர்களை வாசி
உணர்வுகளை சுவாசி
உள்ளங்களை ரசி
Comments
Post a Comment