நண்பர்களுடன் ஒரு சுற்றுலா

     கல்லூரி சுற்றுலா சென்ற தருணம் மகிழ்வின் உச்சம் பெற்றதருணம் ஆம் அது உயர்வான பயணம் தான்
முதல் நாள் பயணம் மலைகளின் இளவரசியான கொடைக்கானல்
அங்கிருக்கும் அருகிலுள்ள இடங்களை பார்த்துவிட்டு முதுநிலை இயற்பியல் சேர்ந்து ஒரு வருடம் ஆக கூடிய நிலையில் முதலாமாண்டு
மாணவர்கள் ஒன்று கூடி குழுப்புகைப்படம் எடுத்து கொண்டோம். நிகழ்வு பைன் வனப்பகுதியில் அந்த அழகான அரிதான அதிசயம் ஒன்று நடந்தது
     பயணம் அனைவருக்கும் பழக்க பட்டது தானே என்று இதனை வாசிக்கும் என் தோழர்,தோழிகள் நினைக்கலாம் ஆனால் பயணமே
ஒரு பயணமானது இம்முறை தான்
ஏனென்றால் எனக்கு தெரிந்த வரை நன்றாக பேசி கொண்டதில்லை வகுப்பில் ஆனால் இந்த பயணம் மூலமே அனைவரின் இலகுவான தன்மைகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதல் நாள் பயணம் கொஞ்சம் கொஞ்சமாக முடிய ஆரம்பித்தது. எல்லாரும் மலையை விட்டு இறங்கிய உடன் சில பேர் வீட்டில் கொண்டு வந்த லெமன், புளி சாதத்தையும் சாப்பிட்டனர்.
      பெரும்பாலும் அங்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இரவுணவு
அருந்திவிட்டு கிளம்பினோம்
      இரண்டாவது நாள் எங்களுக்கு வந்ததே மிகவும் சோதனைகளுக்கு உட்பட்டது. மெதுவாக கிளம்பி கூடங்குளம் அணுமின் நிலையதை பார்வையிட சென்றோம் அங்கு அனுபவம் வேறு. அங்கு Electronic gadgets அனுமதி கிடையாது ஒருநாள் காலை முதல் மாலை வரை எங்களது உபயோகத்தில் இல்லை கைப்பேசி
அணுமின் நிலையத்தை பற்றிய விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது
        மாலை அங்கு முடிந்தவுடன் கன்னியாகுமரியை நோக்கி பயணம் இருந்தது முடிந்த கையோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு
பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்தோம் அனுபவம் அனுபவங்களை மிஞ்சிய உரையாடல்களும் இருந்து கொண்டே இருந்தது
         வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் எங்கும் இருந்தும் வராது அதை பற்றிய இல்லை அதை சுற்றிய சூழல்களை நம் தான் புரிந்து கொண்டு கையாள்வதில் தான் உள்ளது அதன் கம்பசூத்திரமே
         என்றும் இது நினைவாய் மட்டுமில்லாமல் இப்படி எழுத்துகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதினேன் 
இதே போல் என்றும் இனிமைகள்
உங்கள் வாழ்க்கையில் கொஞ்சட்டும்
அதற்கு என் வாழ்த்துக்களும் 
                                  
                                                                                  பிரியமுடன்
                                                  நந்தகுரு


           
         
    

Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்