பகவானே
தனிமை
தனிமையில் வருவதில்லை
தவிப்பில் வருகிறது
*
அலையாய்
மனம் நிறைந்தாலும்
ஆறுதலின்றி படர்கிறது
*
சிலந்தி
வலையினுள் என் வாழ்க்கை
சுற்றிசுற்றி
திரிந்தால் என்ன
*
பைத்தியம்
என்பார்கள் திரும்பி
வாசிக்கவும் பொருள்
புரியவில்லையா விடுங்கள்
*
பகையென்று
நினைத்து பகவானை
அழைத்து கோஷமிடுகிறார்கள்
*
பகவான்
வருவார் சற்று பொறுங்கள்
*
பகவானின் பதில்:
(அடுத்த யுகத்தில் சந்திப்போம்)
Comments
Post a Comment