பிரியமுடன்
புருவங்களை தள்ளி
இருவிழி தரிசனத்தை
தருகிறாள் மங்கை
மென்மையின்
தன்மை அவளின்
பெண்மை
அவளின்
பாதச்சுவடுகளுடன் பயணிக்க
ஆரம்பித்தேன்
தித்திப்பை தரும்
அவளின் உரையாடல்கள்
நிலைமறந்து விட
முடியும் அவளின் தன்மையான
பண்பினால்
அவளை
பிரியமான பிரியத்தால் கூட
அவளை பிரியக்கூடாது என
நினைக்கிறேன்
பிரியமுடன்
நான்
Comments
Post a Comment